தேவகோட்டை, நவ.6: தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் மினிட்டாங்குடி பஞ்சாயத்தைச் சேர்ந்தது கிழவனி கிராமம். இங்கு 40 குடும்பங்கள் வசிக்கின்றனர். கிழவனியில் இருந்து திருவேகம்பத்தூர் மற்றும் ஆனந்தூர் பகுதிகளுக்கு செல்லும் முக்கியமான தார்r;சாலையாகும். கிழவனியில் இருந்து பள்ளி கல்லூரிகளுக்கும், மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு தேவகோட்டைக்கு கிராமமக்கள் வரவேண்டும். இதற்கான தார்r;சாலை போடப்பட்டு 13வருடங்கள் ஆகிறது. சாலை முற்றிலும் பெயர்ந்து கற்கள் மட்டுமே காட்சி அளிக்கிறது. இது குறித்து சேதுபதி கூறுகையில், எங்கள் ஊருக்கு புதிதாக சாலை போடுவதற்கு கிராம மக்கள் பல ஆண்டு காலமாக கலெக்டருக்கு மனு கொடுத்து வருகின்றோம். ஆனால் இதுவரை சாலை போடப்படவில்லை. தற்போது மழை காலம். பழுதான சாலையில் அவசர தேவைகளுக்கு போகமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் சிரமத்தை கருதி புதிதாக சாலை வசதி அமைத்துத்தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
+
Advertisement
