சிவகங்கை, டிச. 4: சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணியம்மா, ஒன்றிய செயலாளர் உலகநாதன் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் விஸ்வநாதன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் அர்ஜுனன், மாநில குழு உறுப்பினர் பொன்னுத்தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, கருப்புசாமி, முத்துராமலிங்கபூபதி, சுரேஷ், அய்யம்பாண்டி பேசினர். மாநில செயலாளர் பெ.சண்முகம் சிற்பபுரையாற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement

