மண்டபம்,ஜூலை 30: பனைக்குளம் மரஹபா நண்பர்கள் சார்பில், மூன்றாம் ஆண்டு ஐவர் கால்பந்தாட்ட போட்டி பனைக்குளம் கடற்கரையில் மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் பனைக்குளம்,புதுவலசை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் 32 அணிகளாக கலந்து கொண்டனர். பனைக்குளம் முஸ்லீம் பரிபாலன சபை ஐக்கிய முஸ்லீம் சங்க நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக யூத் வெல்பர் ஆபிஸர் தினேஷ்குமார் சிறப்புரை நிகழ்த்தினார். முன்னாள் ஊராட்சி தலைவி பவுசியா பானு முன்னிலை வகித்தார். இறுதி போட்டியில் மரஹபா அணியினர் 4-0 என்ற கணக்கில வெற்றி பெற்று முதல் பரிசு ரூ.12,000 மற்றும் வெற்றி கோப்பையை வென்றனர். புதுவலசை அணி இரண்டாம் பரிசாக ரூ.8000, மர்ஹபா சி அணியினர் மூன்றாம் பரிசாக ரூ.6000, கீழக்கரை அணியினர் நான்காம் பரிசாக ரூ.4000 மற்றும் பரிசு கோப்பையை வென்றனர்.
+