Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சுற்றுலா தொழில் நிறுவனங்கள் பதிவு செய்வது கட்டாயம்

சிவகங்கை, ஆக.4: சுற்றுலா தொழில் நிறுவனங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கவுள்ள நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையில் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே செயல்பட்டு வரும் சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வழிகாட்டு நெறிமுறைகளை பெறுவதற்கும், கூடுதல் விவரங்களுக்கும், மாவட்ட சுற்றுலா அலுவலர், மாவட்ட சுற்றுலா அலுவலகம், காரைக்குடி என்ற முகவரியிலோ அல்லது touristofficekaraikudi@gmail.com < mailto:touristofficekaraikudi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04565 232348 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.