சிவகங்கை, ஆக.3: சிவகங்கையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் குழந்தைகள் நலக் காவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி, கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தனர். போலீஸ் ஸ்டேசனுக்கு வரும் குழந்தைகளை எப்படி நடத்துவது, அவர்களின் மனநிலை அறிந்து அதற்கேற்றாற்போல் செயல்படுவது, குழந்தைகள் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எஸ்பி சிவபிரசாத், போக்சோ நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்முரளி, ஏடிஎஸ்பி பிரான்சிஸ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனிதா கிறிஸ்டி, நீதித்துறை நடுவர் இளைஞர் நீதிக்குழுமம் நீதிபதி செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை மற்றும் போலீசார், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.