தேவகோட்டை, நவ.28: தேவகோட்டை காட்டூரணி தெருவில் வசித்து வருபவர் யாசர் அராபத். பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார். மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். தற்போது பெய்து வரும் மழையால் நேற்று முன்தினம் மாலை வீட்டின் ஒருபகுதி இடிந்து விழுந்து தரைமட்டமானது.அப்போது வீட்டில் யாரும் இல்லை. வீடு இடிந்தது குறித்து வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வருவாய்த் துறையினர் பார்வையிட்டு நிவாரணம் வழங்க மேலதிகாரிக்கு பரிந்துரை செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கலிய நகரி கிராமத்தில், பூமிநாதன் என்பவரின் வீடும், முகிழ்த்தகம் கிராமத்தில் சசிரேகா, கீதா ஆகியோரின் வீடுகளும் சேதமடைந்துள்ளது. திருவாடானை தாசில்தார் அமர்நாத் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
+
Advertisement

