சிவகங்கை, ஆக.12: காளையார்கோவில் பகுதிக்குட்பட்ட மதி விற்பனை அங்காடியில் சுய உதவிக்குழு பொருட்களை விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் காளையார்கோவில் பகுதி மதி விற்பனை அங்காடியில், சுய உதவிக்குழு பொருட்களை விற்பனை செய்ய தகுதியுள்ள மகளிர் சுய உதவிக்குழு, பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மதி விற்பனை அங்காடி அமைந்துள்ள காளையார்கோவிலிருந்து 5முதல் 8கி.மீ தொலைவில் உள்ள கூட்டமைப்புகள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தோர், நலிவுற்றோர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். குறைந்தபட்சம் 3முதல் 5குழு உறுப்பினர்கள் விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்தல் வேண்டும். விற்பனையில் அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.சிவகங்கை, ஒருங்கிணைந்த மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டிடத்தில் இயங்கி வரும் இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, மேற்கண்ட அலுவலகத்தில் ஆக.11, மாலை 5மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கும் வகையில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.