சிவகங்கை, டிச. 11: சிவகங்கை அருகே ஓக்கூர் சோமசுந்தரம் செட்டியார் அரசு உதவி பெரும் மேல்நிலை பள்ளியில், சிவகங்கை மாவட்ட காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் மனித உரிமைகள் தினம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் அப்பாஸ் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. புள்ளியியல் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், எஸ்ஐ சேகர், எஸ்எஸ்ஐக்கள் ஜோதிமணி, மஞ்சுளா போலீசார் பாலமுருகன், தேவிகா, ஆசிரியர்கள் ஜார்ஜ்பிரின்ஸ், விசாகராஜா மற்றும் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


