Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

செஞ்சேரி விநாயகர், மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரம்பலூர்,மே.20: செஞ்சேரி விநாயகர், மஹாமாரியம்மன் மற்றும் மஹாகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட செஞ்சேரி கிராமத் தில் உள்ள விநாயகர், மகா மாரியம்மன் மற்றும் மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடை பெற்றது. இதனையொட்டி கடந்த 18 ம்தேதி காலை 7 மணிக்கு மேல், மங்களஇசை, விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மஹாதீபாரதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு யாக சாலை பிரவேசம், முதற்கால யாக வேள்வி, மகா தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக வேள்வி, யாத்ரா தானம், கலசங்கள் ஆலயம் வலம் வருதல் நடைபெற்றது.

காலை 9 மணிக்குள் கடக லக்னத்தில், விநாயகர் மஹா மாரியம்மன் மற்றும் மஹா காளியம்மன் ஆகிய தெய்வங்களின் ஆலய விமானம் மற்றும் மூலஸ்தான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் தலைவர் சீனிவாசன், ஆலம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் கல்பனா சீனிவாசன் மற்றும் கிராம மூப்பாடி, ஓடும் பிள்ளை, அனைத்து கரைக்காரர்கள், கோயில் பூசாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் செஞ்சேரி கிராமம் மட்டுமின்றி, சொக்கநாதபுரம், ஆலம்பாடி, திருப்பெயர் பெரம்பலூர் குரும்பலூர், எசனை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மஹா தீபாராதனை, அன்னதானம், பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மேல் மஹா மாரியம்மனுக்கு பொங்கல் மாவிளக்கு பூஜை நடை பெற்றது. பின்னர் மகாமாரியம்மன் மற்றும் மகாகாளியம்மன் திருவீதிஉலா நடைபெற்றது.