Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதர்மண்டி காணப்படும் சமத்துவபுரம் நூலகம்

ஆர்.கே.பேட்டை, ஜன. 22: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரம் சமத்துவபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு நூலக கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. தற்போது, இந்த நூலகத்தைச் சுற்றிலும் செடிகொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் இங்கு வரும் வாசகர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுதவிர தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நூலகத்திற்குள் புகுந்துவிடும் அபாயமும் உள்ளது.

மேலும், நூலகம் தினசரி திறக்கப்படாததால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். இந்த, நூலகத்தில் பொது அறிவு, பாடங்கள் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் என 1000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இந்த, புத்தகங்களை பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, நூலகத்தைச் சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றியும், தினசரி நூலகத்தை திறந்து வாசகர்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.