கெங்கவல்லி, அக்.31: சேலத்திலிருந்து துறையூர் செல்லும் அரசு பஸ், ஆத்தூரில் இருந்து கெங்கவல்லி- தம்மம்பட்டி வழியாக பஜாரில் சென்று கொண்டிருந்தது. கெங்கவல்லி பஸ் நிறுத்தம் அருகில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், செல்போன் பேசியபடி டூவீலரில் அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றார். அப்போது, வாகனங்கள் எதிரே வந்ததால், அவரால் செல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், அரசு பஸ் முன்பு டூவீலரை நிறுத்தி, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை தகதாத வார்த்தையால் பேசினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பஸ்சை நிறுத்தியதால், இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, வாலிபர் மீது புகார் அளிக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, அங்கிருந்து பஸ் புறப்பட்டது. இதனால் கெங்கவல்லி-வீரகனூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
+
Advertisement 
 
  
  
  
   
