கெங்கவல்லி, அக்.31: கெங்கவல்லி அருகே, செந்தாரப்பட்டி பில்லங்குளம் பகுதியில் வசித்து வருபவர் சிவபெருமாள். அப்பகுதியில் பாக்கு தட்டு தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். தினந்தோறும் 10க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், பாக்கு தட்டு தயாரிக்கும் கம்பெனியில், விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது. நேற்ற 4 கூலித் தொழிலாளர்களை விஷ வண்டுகள் கொட்டியது. இதில் காயமடைந்த 4 பேரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த தகவலின் பேரில், கெங்கவல்லி நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில் வீரர்கள் விரைந்து சென்ற, விஷ வண்டுகளை அழித்தனர்.
+
Advertisement 
 
  
  
  
   
