தம்மம்பட்டி, அக்.30: தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்டில், தம்மம்பட்டி மற்றும் செந்தாரப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நேற்று அதிமுக சார்பில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கெங்கவல்லி எம்எல்ஏ நல்லதம்பி, கெங்கவல்லி மேற்கு ஒன்றிய செயலாளர் துரை ரமேஷ் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி நகர செயலாளர்கள் பொன்னுசாமி, ரமேஷ்குமார் மற்றும் கோபி காளிதாஸ் உள்ளிட்டோர் கலந்து ெகாண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இக்கூட்டத்தில் செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி வார்டு செயலாளர்கள் மற்றும் அமைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement
