சேலம், செப்.30: உலக அளவில் இருதய நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதையும், மாரடைப்பால் மரணம் அடைவதையும் தடுக்கும் வகையில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி உலக இருதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இருதய தினத்தின் கருப்பொருள் ஒரு துடிப்பை தவற விடாதீர்கள் என்பதாகும். இதனையொட்டி, சேலம் விம்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளை கவுரவிப்பதை நோக்கமாக கொண்ட ஹீலிங் சர்க்கிள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சேலம் தெற்கு காவல் துணை ஆணையர் கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா, சேலம் தெற்கு காவல் உதவி ஆணையர் முரளி ஆகியோர் தலைமை விருந்தினராக பங்கேற்றனர். நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக விம்ஸ் சிறுநீரக மாற்று நோயாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாற்று அறுவை சிகிச்சைக்கு பிந்தைய சலுகை அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. மருத்துவ இயக்குநர் டாக்டர்கள் மீனாட்சி சுந்தரம், துணை மருத்துவ இயக்குநர் அசோக் மற்றும் ஆலோசகர்கள் அர்ப்பணிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டனர். டாக்டர்கள் சிவசுப்பிரமணியன், தலையீட்டு இருதயநோய் நிபுணர் பிரசன்னா, மூத்த இருதயநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மனோகரன், செந்தில்நாதன், சிறுநீரக மருத்துவர்கள் மோகன் பாபு, சிறுநீரக மருத்துவர், பல்துறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குழுவுடன் கலந்து கொண்டனர்.