இளம்பிள்ளை, நவ.29: வீரபாண்டி வடக்கு ஒன்றியம், வேம்படிதாளம் ஊராட்சி திருவளிப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியில், ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.19 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுகிறது. வீரபாண்டி பிடிஓ அருள் ஆனந்தராஜ், பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பிடிஓ முருகேசன், மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், வீரபாண்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராமாபுரம் சதீஷ்குமார் மற்றும் சண்முகம், ராஜேந்திரன், திருமூர்த்தி, மகாலிங்கம், சேகர், விக்னேஷ், மணிகண்டன், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement

