கெங்கவல்லி, அக்.28: ஆத்தூர் அருகே, கல்வராயன் மலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை பெய்ததால், முட்டல் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நீர்வரத்து சீரானதால், வனத்துறையினர் குளிப்பதற்கு அனுமதி வழங்கினர். இதையடுத்து, சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு படையெடுத்து வரத் தொடங்கினர். நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இங்கு வந்து நீர்வீழ்ச்சியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அதேபோல் வனத்துறை சார்பில், மின்சார சைக்கிள்களை, குழந்தைகள் முதல் பெரியோர் வரை எடுத்து உற்சாகமாக சுற்றி பார்த்தனர்.
+
Advertisement
