ஏற்காடு, அக்.28: ஏற்காட்டில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிமூட்டம், அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு பிறகு, நேற்று மீண்டும் கடும் பனிமூட்டம் நிலவியது. மலைப்பாதையில், வெள்ளை கம்பளம் போர்த்தியது போல பனிப்பொழிவு காணப்பட்டது. இதை நேற்று சுற்றுலாப் பயணிகள் ரசித்தபடி சென்றனர். சிலர் கேமரா மற்றும் செல்போன்களில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். தற்போது ஏற்காடு மலைப்பாதையில் நிலவும் பனிப்பொழிவால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, வாகனங்களில் சென்றனர். மேலும், கடும் குளிர் நிலவுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
+
Advertisement
