கெங்கவல்லி, ஆக.27: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, நூத்தப்பூர் பகுதியை சேர்ந்த 16வயது சிறுமி, 10ம் வகுப்பு பாதியில் நின்று விட்டு, தற்போது வீரகனூரில் கம்ப்யூட்டர் வகுப்பு சென்று வருகிறார். சிறுமியின் தந்தை வீரகனூர் அருகே வேப்பம்பூண்டி மேடு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 30ம் தேதி, ஓட்டலில் இருந்து வீரகனூர் கம்ப்யூட்டர் வகுப்பு சென்ற சிறுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. மகளை உறவினர் மற்றும் ேதாழிகள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை, வீரகனூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.
+
Advertisement