நரசிங்கபுரம், ஆக.27: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள நரசிங்கபுரம் பகுதியில் பெரியநாயகி அம்மன் கோயில் மற்றும் பெரியாண்டிச்சி அம்மன் கோயில் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று கோயில் முன் குவிந்தனர். இது குறித்த தகவலின் பேரில், ஆத்தூர் நகர போலீசார் இன்ஸ்பெக்டர் அழகு ராணி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருதரப்பினிடம் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
+
Advertisement