சேலம், செப்.26: தமிழகத்தில் 5 நகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, பெரும்புதூர் நகராட்சி கமிஷனர் ஹேமலதா அரூர் நகராட்சி கமிஷனராகவும், திருத்துறைப்பூண்டி நகராட்சி கமிஷனர் துர்கா கொல்லங்கோடு நகராட்சி கமிஷனராகவும், இடங்கணசாலை நகராட்சி கமிஷனர் பவித்ரா நரசிங்கபுரம் நகராட்சி கமிஷனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதேபோல், கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு வேலூர் மாநகராட்சி உதவி கமிஷனராகவும், வேலூர் மாநகராட்சி உதவி கமிஷனர் சதீஷ்குமார் கிருஷ்ணகிரி நகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன்ரெட்டி பிறப்பித்துள்ளார்.
+
Advertisement