கெங்கவல்லி, செப்.26: தலைவாசல் ஊராட்சியில் தினசரி காய்கறி மார்க்கெட், வாரச்சந்தை ஆகியவற்றுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது. முதலில், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் ஏலம் விடப்பட்டது. இதில் பாண்டியன், மணி, முருகேசன் ஆகிய மூன்று பேர் கலந்து கொண்டனர். ஏலத்தொகையாக ரூ.1 ஒரு கோடியே ஐந்தாயிரத்தில் ஏலம் தொடங்கியது. இதில் பாண்டியன் மற்றும் மணி இடையே கடும் போட்டி நிலவியது. முடிவாக ரூ.1 கோடியே 74 லட்சத்து 55 ஆயிரத்துக்கு பாண்டியன் ஏலம் எடுத்தார். தொடர்ந்து தலைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை ஏலம் ஆலமுத்து என்பவர் ரூ.25 லட்சத்து 5 ஆயித்துக்கு ஏலம் எடுத்தார். இந்த ஏலம் காலம் அக்டோபர் முதல் மார்ச் வரை 6 மாத காலம் ஆகும். அரசு நிர்ணயித்த தொகையை விட அதிகமாக சுங்கம் வசூல் செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம ஊராட்சி கமிஷனர் செந்தில்குமார் தெரிவித்தார்.
+
Advertisement