கெங்கவல்லி, அக்.25: ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா கமால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆத்தூர் நகராட்சி 33 வார்டுகளில், வரும் 29ம் தேதி காலை 11 மணியளவில் சிறப்பு வார்டு கூட்டம் நடத்த தமிழக அரசு அறிவித்துள்ள. இதனையடுத்து 33 வார்டுகளில் அடிப்படை வசதியான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுதுகள், பூங்கா பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், இந்த சிறப்பு வார்டு கூட்டத்தில் கலந்து கொண்டு பொது மக்கள் புகார் அளிக்கலாம். மேலும் பொதுமக்களுக்கு தண்டோரா மற்றும் ஆட்டோ விளம்பரம் மூலம் கூட்டம் குறித்து அறிவிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று அடிப்படை வசதிகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம். பிரதான மூன்று கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement
