வாழப்பாடி, செப்.25: அயோத்தியாபட்டணம் ஒன்றியம், மாசிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். முகாமில், அயோத்தியாப்பட்டணம் வட்டார அட்மா திட்ட குழு தலைவர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் குணலட்சுமி, பேரூராட்சி தலைவர் பாபு (எ) செல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவேந்திரன், நாகராஜ், பேரூராட்சி துணை தலைவர் செல்வசூர்யா சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை மக்கள் வழங்கினர்.
+
Advertisement