இடைப்பாடி, செப்.24: இடைப்பாடி ஒன்றியம் வேம்பனேரி, தாதாபுரம் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கான, உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம், மாரிமுத்து கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தாசில்தார் வைத்திலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆரோக்கியநாதன் கென்னடி, செல்வகுமார், இடைப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பூவாகவுண்டர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதையன் ஆகியோர் குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர். இதில் தனி தாசில்தார் ராஜமாணிக்கம், கௌதம், இந்திராணி காளியப்பன், செல்வன், கார்த்தி, சிவக்குமார் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பட்டா மாறுதல், பெயர் நீக்கம், மகளிர் உரிமைத் தொகை, ஆதார் கார்டில் பெயர் திருத்தம், இலவச வீட்டுமனை பட்டா கேட்டும் உள்ளிட்ட 671 மனுக்கள் ெபாதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.
+
Advertisement