சேலம், அக்.23: சேலம் ஆட்டையாம்பட்டி கும்பாடிப்பட்டி பகுதியில் அரசு சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பவானி மகிழம்பட்டியை சேர்ந்த மதுமிதா (20) என்பவர் படித்து வருகிறார். நேற்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக பேருந்தில் இருந்து இறங்கிய அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஜீப் மதுமிதா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆட்டையாம்பட்டி போலீசார், ஜீப்பை ஓட்டி வந்த பெங்களூரை சேர்ந்த நிதின்மோகன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement