ஓமலூர், செப்.23: ஓமலூர் பஜார் தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் சக்திவேல்(26). இவர் ஓமலூரில் உள்ள பொதுத்துறை வங்கியில் வேலை செய்து வருகிறார். கடந்த 18ம் தேதி, சக்திவேல் தனது வீட்டின் முன்பு டூவீலரை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை, எழுந்து வந்து பார்த்தபோது, டூவீலர் திருடு போயிருந்தது. இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் வழக்குபதிவு செய்து, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தனர். இதில் 3 இளைஞர்கள் சக்திவேலின் டூவீலரை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட கருப்பூர் மஞ்சுளாம்பள்ளத்தை சசிகுமார் மகன் தனேஷ்குமார்(19), கந்தசாமி மகன் மோகன்ராஜ்(19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 பேரை சேலம் மத்திய சிறையிலும், சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.
+
Advertisement