சேலம், ஆக.23: சேலம் அம்மாபேட்டை காமராஜர்நகர் அருகேயுள்ள காந்திஜிநகரை சேர்ந்தவர் சக்திவேல் (55). இவர் தனது வீட்டையொட்டி பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்த பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அம்மாபேட்டை போலீசார், அந்த பெட்டிக்கடைக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் 12 கிலோ இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரான சக்திவேலை கைது செய்தனர். அவருக்கு புகையிலை பொருட்களை சப்ளை செய்த நபர் குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement