ஆட்டையாம்பட்டி, நவ.22: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (50). இவரது மகள் தன (18). இவர், சேலம் அருகே சீராகாபாடி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த தன நேற்று காலை பூப்பறித்து விட்டு வருவதாக கூறிச்சென்றவர் விடுதிக்கு திரும்பவில்லை. இதுகுறித்து விடுதி காப்பாளர், தனயின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
+
Advertisement


