தாரமங்கலம், நவ.22: தாரமங்கலம் அருகே அழகுசமுத்திரம் கும்பகர்ணன் வளவு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(39). இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த முனுசாமி குடும்பத்திற்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி சரவணன் தனது மாமியார் விட்டிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் சரவணனை வழிமறித்து, மிரட்டி தாக்கினர். இதில், பல் உடைந்து காயமடைந்த சரவணன், ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். =இதுகுறித்த புகாரின்பேரில், தாரமங்கலம் போலீசார்விசாரித்து கும்பகர்ணன் வளவு பகுதியைச் சேர்ந்த ராஜா(65), தவமணி (36), சர்மிளா, குப்பாயி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராஜாவை கைது செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
+
Advertisement


