கெங்கவல்லி, செப். 22: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே தென்குமரை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (61), விவசாயி. இவருக்கும், உஷா என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் உஷா, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜேந்திரன், அவரது மனைவி புவனேஸ்வரி ஆகிய இருவரை 30க்கும் மேற்பட்ட கும்பலால் தாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை சுடுகாட்டு பகுதியில் தூக்கி வீசினர்.
இதில் காயம் அடைந்த ராஜேந்திரன், அவரது மனைவி புவனேஸ்வரி சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று பாலமுருகன் (51) என்பவரை தலைவாசல் போலீசார் கைது செய்தனர்.