இளம்பிள்ளை, நவ.21: வீரபாண்டி வட்டாரம், அட்மா திட்டத்தின் கீழ் பெருமாகவுண்டம்பட்டியில் பயறு வகைகளில் களை மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் 25 விவசாயிகள் 5 குழுக்களாக பிரிந்து முன்நிலை செயல்விளக்கம் அமைக்கப்பட்ட உளுந்து மற்றும் துவரை வயலில் அமராந்தஸ், கீழாநெல்லி, முக்குறுட்டை கீரை, சாரணை, மயில் கொண்டை புல் ஆகிய களைகளை சேகரம் செய்து, களைகளின் பண்புகள் மற்றும் கட்டுபாடுகள் குறித்து அறிந்து கொண்டனர். மேலும், துவரையில் ஊடுபயிராக உளுந்து பயிறுடுவதால் ஏற்படும் நன்மைகளை, பின்னர் 45 நாட்களுக்கு பிறகு செடிகளின் கிளைகளை கிள்ளிவிடுவதால், கீழ் கிளைகளின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு, காய்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகின்றன. இதனால் விளைச்சல் அதிகரிக்கிறது. பயிற்சியாளராக ஓய்வு பெற்ற துணை வேளாண்மை அலுவலர் பழனிசாமி கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சரஸ்வதி மற்றும் தீபன் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


