நரசிங்கபுரம், ஆக. 21: ஆத்தூர் அருகே உள்ள புதுகொத்தாபாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார்(48). இவர் தனது விவசாய தோட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனமாக வழங்க வைக்கோல் போர் அமைத்திருந்தார். இந்த நிலையில், இவரது நிலத்துக்கு அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறி, விவசாய தோட்டத்தில் மாட்டிற்காக இருந்த வைக்கோல் மீது விழுந்து தீபற்றிக்கொண்டது. இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அப்பகுதியில் புகை மூட்டம் காணப்பட்டது. பொதுமக்களுக்கு கண் எரிச்சல், குமட்டல் ஏற்பட்டது.
+
Advertisement