இடைப்பாடி, நவ. 19: இடைப்பாடியை சுற்றியுள்ள பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, கல்வடகம், பக்கநாடு, இருப்பாளி, சித்தூர், வெள்ளரி வெள்ளி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதியில் 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். தற்போது மரவள்ளிக்கிழங்கு அறுவடை வேலையில், விவசாயிகள் கிழங்குகளை பிடுங்கி குச்சிகள் தனியாகவும், மரவள்ளி கிழங்கு தனியாகவும் பிரிக்கும் கிழங்குகளை லாரிகளில் ஏற்றி, மில்லுக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டை விட நடப்பாண்டு, மரவள்ளிக்கிழங்குகள் விளைச்சல் குறைந்து, கடந்தாண்டை விட நடப்பாண்டு டன்ணுக்கு மரவள்ளிக்கிழங்கு ரூ.8,500ல் இருந்து ரூ.9500 வரை விலை எடுத்து கொள்கின்றனர். விலை கூடுதலாக போகிறது என விவசாயிகள் கூறினார்.
+
Advertisement


