ஓமலூர், செப்.19: ஓமலூர் அடுத்த கொண்டையன்காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் நாகராஜ் (34). இவர் சேலம் வந்து விட்டு, நேற்று மதியம் ஓமலூர் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓமலூர் புளியம்பட்டி அருகே, மேம்பாலம் அருகே வந்த நாகராஜ், நிலை தடுமாறி டூவீலரால் சாலையின் சென்டர் மீடியனில் மோதி கீழே விழுந்தார். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த ஓமலூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement