நரசிங்கபுரம் , செப்.19: ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சியில் நாளை 20 மற்றும் 21, 22 ஆகிய மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என ஆணையாளர் அறிவித்துள்ளார். ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளுக்கு, மேட்டூர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேட்டூர் குடிநீர் பிரதான குழாய் செல்லியம்பாளையத்தில் மராமத்துப்பணி பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை மற்றும் 21, 22 ஆகிய மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா கமல் கேட்டுக்கொண்டுள்ளார்.
+
Advertisement