தாரமங்கலம், நவ.18: தாரமங்கலம் அருகே அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரி (65). இவரது கணவர் சின்னப்பன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவர் அருகில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் பகுதியில் வசித்து வருகிறார். அவர் கர்பமாக இருப்பதால், அவரை பார்த்து கொள்ள இரவில் மகள் விட்டிற்கு செல்வது வழக்கம். இதனை கண்காணித்து மர்ம நபர்கள், நேற்று முன்தினம் வழக்கம் போல், மகள் விட்டிற்கு மகேஷ்வரி சென்றுள்ளார். நேற்று காலை விட்டிற்கு சென்ற போது, வீட்டின் கதவை உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க செயின், மோதிரம், தோடு என நாளே முக்கால் பவுன், ரூ.75000 பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி ெசன்றது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


