சங்ககிரி, செப்.18: சங்ககிரியில், சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்டில், சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில், பெரியாரின் 147வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்பி தலைமை வகித்து, பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சமூக நீதி நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், இளம்பிள்ளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நகர, ஒன்றிய திமுக செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னோடிகள் என பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement