கெங்கவல்லி, செப்.18: ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில், ₹10 லட்சம் மதிப்பில் புதிய கழிவறை கட்டிடம் கட்டுவதற்கு எம்எல்ஏ ஜெயசங்கரன் பூமி பூஜை செய்து வைத்தார். ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஏத்தாப்பூர் பேரூராட்சியில், 4வது வார்டில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கழிவறை கட்டிடம் கட்டுவதற்கு,எம்எல்ஏ ஜெய்சங்கரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் கிட்டு, முருகன் மற்றும் அப்பகுதி அதிமுக நிர்வாகிகள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement