சேலம், அக்.17: சேலம் வழக்கறிஞர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடந்தது. செயலாளர் நரேஷ்பாபு வரவேற்றார். இதில், சென்னை வழக்கறிஞர் ராஜீவ்காந்தியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி வழக்கறிஞர்கள் கொடுத்த மனு மீது விவாதிக்கப்பட்டது. இதையடுத்து வக்கீலை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (வெள்ளி) ஒருநாள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், துணைத்தலைவர் சுகவனேஸ்வரன், பொருளாளர் அசோக்குமார், நூலகர் கந்தவேல், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சசிகலா, பன்னீர்செல்வம், சீனிவாசன், பிரவீன்குமார், மணிகண்டன், பூங்கொடி, விஜயகுமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement