சேலம், அக்.17: சேலம் கிச்சிப்பாளையம் காளிகவுண்டர்காடு பகுதியை சேர்ந்தவர் பாபு (55). இவர் கடந்த 12ம்தேதி இரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 6 பேர், திடீரென பாபுவை தாக்கி 500 ரூபாயை பறித்து சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 சிறுவர்களை கைது செய்து காப்பகத்திற்கு அனுப்பினர். தலைமறைவாக இருந்த மேலும் 2 சிறுவர்களையும் பிடித்த போலீசார் அவர்களையும் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
+
Advertisement