சேலம், அக்.17: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், சேலம் மின் பகிர்மான வட்டம், வாழப்பாடி கோட்டத்தில் இன்று (17ம் தேதி) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சேலம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் சிங்கிபுரம் துணை மின் நிலைய வளாகம், வாழப்பாடி கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. வாழப்பாடி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தெரிவித்து பயன் பெறலாம் என்று செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
+
Advertisement