கெங்கவல்லி, செப்.17: ஆத்தூர் ஒன்றியம், பைத்தூர் ஊராட்சி நைனார்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார் (45), கூலித் தொழிலாளி. இவர் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை, விஜயகுமார், அவரது மனைவி பிரேமா ஆகியோர் கூலி வேலைக்கு சென்று விட்டனர். இவர்களது 3 குழந்தைகள் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென குடிசை வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை கண்டு அருகில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்து ஊற்றி அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரொக்கம் ₹23 ஆயிரம், பீரோ, கட்டில், டிவி, பிரிட்ஜ், மளிகை பொருட்கள், ஆவணங்கள், துணிமணிகள் என அனைத்தும் எரிந்து நாசமானது. இதை அறிந்த பைத்தூர் வடக்கு விஏஓ கோபி நேரில் ஆய்வு செய்து அறிக்கையை, தாசில்தார் பாலாஜிக்கு அனுப்பி வைத்தார். தீ விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement