கெங்கவல்லி, அக்.16: சேலம் மாவட்டம், வீரகனூர் எஸ்ஐ சக்திவேல் வேப்பம்பூண்டி மற்றும் போலீசார் வீரகனூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மாரியம்மன் கோயில் அருகில் வசிக்கும் சுப்பிரமணி மனைவி சர்க்கரை அம்மாள்(62), என்பவர் வீட்டில் மதுபானங்கள் பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தன. இதன்பேரில், வீரகனூர் போலீசார் சர்க்கரை அம்மாள் மீது வழக்கு பதிவு கைது செய்தனர். தொடர்ந்து 20 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
+
Advertisement