கெங்கவல்லி, செப்.14: ஆத்தூர் மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர்கள் சொக்கநாதபுரம் ஊராட்சியில் உள்ள கிழங்கு அரவை மில்லுக்கு நேற்று லாரியில் சென்று லோடு ஏற்றிக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர். லாரியில் 8 தொழிலாளர்கள் இருந்தனர். மாலை 7 மணியளவில் ஆத்தூரை நோக்கி பழனியாபுரி சாலையில் அக்கிச்செட்டிப்பாளையம் வளைவான பகுதியில் சென்றபோது, அந்த வழியாக டூவீலர் மீது மோதாமல் இருப்பதற்காக திடீர் பிரேக் போட்டபோது, நிலை தடுமாறிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் அறிவழகன்(48), குமார்(49), சின்னத்தம்பி(50), தேவேந்திரன்(55), மாரியப்பன்(58), பொன்னையன்(45), ரவி(57), முத்து(30), ராஜி(55) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement