சேலம், செப்.14: சேலம் ஆட்டையாம்பட்டி செல்லமுத்துக்கவுண்டர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (46). இவர் டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் அவரை கைது செய்ததுடன், 28 மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர். காரிப்பட்டி மின்னாம்பள்ளி பக்கமுள்ள பொன்மலைநகரை சேர்ந்த முனியப்பன், நாகராஜ் ஆகியோர் சந்துக்கடை மூலம் மதுபானம் விற்பனை செய்து வந்ததாக காரிப்பட்டி போலீசார் கைது செய்தனர். இதேபோல் மதுவிற்றதாக அம்மாபேட்டை வாய்க்கால்பட்டறையை சேர்ந்த சிலோன் குமார்(57), அன்னதானப்பட்டி சந்தைப்பேட்டை வணிகவளாகத்தில் மகேஸ்வரி(40), பெரியகொல்லப்பட்டி வெங்கடேஷ்(28) ஆகியோரை கன்னங்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
+
Advertisement