இளம்பிள்ளை, அக்.13: தீபாவளியை முன்னிட்டு, இளம்பிள்ளையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, லத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மகுடஞ்சாவடி காவல் எல்லைக்கு உட்பட்ட இளம்பிள்ளை, இடங்கணசாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் ஜவுளி வாங்க நேரடியாக வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து மக்கள் அதிகளவில் வருவதால் இடங்கணசாலை பேருந்து நிலையம் மற்றும் காடையாம்பட்டி பிரிவு சாலை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாமல் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், கேவிபி தியேட்டர் ரோடு பகுதியில் கார், லாரி, பஸ், ஆட்டோ உள்ளிட்டவை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.