சேலம், அக்.13: சேலம் மாவட்டத்தில் நேற்று மேட்டூர், ஆணைமடுவு உள்பட 265.70 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்திலும் தொடர்ச்சியாக மழைப்பொழிவு இருந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேட்டூரில் அன்று நல்ல மழை கொட்டித்தீர்த்தது.
நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும், மேட்டூரில் 78.6 மிமீ மழை பதிவானது. இதேபோல் வாழப்பாடி அடுத்த ஆணைமடுவில் 35 மிமீ மழை ெபய்தது. சேலம் மாவட்டத்ைத பொறுத்தவரை நேற்று 265.70 மிமீ மழை கொட்டித்தீர்த்தது. அதன்படி வாழப்பாடி மற்றும் வீரகனூரில் 23 மிமீ, ஏத்தாப்பூரில் 19 மிமீ, நத்தகரையில் 17 மிமீ, தம்மம்பட்டி 15 மிமீ, சங்ககிரியில் 14 மிமீ என மழை பதிவானது.