சேலம், ஆக.13: ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை குருவரெட்டியூரைச் சேர்ந்தவர் விவேக் (எ) கிட்டு (23). இவரை கடந்த 2021ம் ஆண்டு வழிப்பறி வழக்கு ஒன்றில் பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று விவேக் (எ) கிட்டுவை போலீசார் கைது செய்தனர்.
+
Advertisement