நரசிங்கபுரம், ஆக.13: ஆத்தூர் ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையில், எஸ்.ஐ. ஜெயசூர்யா மற்றும் போலீசார் தென்னங்குடி பாளையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அக்கிச்செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல்(52) என்பவர், மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி தென்னங்குடிபாளையம் பேக்கரி பின்புறம் பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மது பாட்டில்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement