வாழப்பாடி, செப்.12: பனமரத்துப்பட்டி ஒன்றியம், குரால்நத்தம் ஊராட்சி கோணமடுவு பகுதியில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிக்காக, ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கட்டுமான பணிகளை, சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய திமுக செயலாளர் உமாசங்கர், வட்டார மருத்துவ அலுவலர் மகிதா ராஜ்குமார் மற்றும் மருத்துவர் அருட்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement